/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் ரோபோட் மூலம் ஆயுதபூஜை
/
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் ரோபோட் மூலம் ஆயுதபூஜை
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் ரோபோட் மூலம் ஆயுதபூஜை
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் ரோபோட் மூலம் ஆயுதபூஜை
ADDED : அக் 09, 2024 04:33 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : கிருஷ்ணன் னகோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் ரோபோட் மூலம் ஆயுத பூஜை நடந்தது.
வேந்தர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சசி ஆனந்த், துணை வேந்தர் நாராயணன் , பதிவாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தனர். இதில் சூடம் வைக்கப்பட்ட தட்டினை ரோபோட் மூலம் இயக்கி சுவாமி படங்களுக்கு சுமார் 20 நிமிடங்கள் கடிகார முள் சுற்றுப்பாதை, எதிர்ப்பாதை வழியாக தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதுகுறித்து ஆராய்ச்சி துறை பேராசிரியர் பள்ளிகொண்ட ராஜசேகர் கூறுகையில்,. இந்த ஆரத்தி எடுக்கும் ரோபோட் மிஷினில் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் தொழில்நுட்பத்துடன் 12 வோல்ட் பேட்டரி மோட்டார், ப்ரோக்ராம் செய்த போர்டு உள்ளது.
இதன் மூலம் ரோபோட் இயங்குகிறது. இதனை பேராசிரியர்கள் முரளி, கோட்டை மலை மற்றும் பேராசிரியர் குழுவினர் வடிவமைத்துள்ளனர் என்றார். பல்கலைக்கழக பேராசிரியர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.