/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அய்யனார் கோயில் காட்டாற்றில் வெள்ளம் --சிக்கியோர் 2 மணி நேரத்திற்கு பின் மீட்பு
/
அய்யனார் கோயில் காட்டாற்றில் வெள்ளம் --சிக்கியோர் 2 மணி நேரத்திற்கு பின் மீட்பு
அய்யனார் கோயில் காட்டாற்றில் வெள்ளம் --சிக்கியோர் 2 மணி நேரத்திற்கு பின் மீட்பு
அய்யனார் கோயில் காட்டாற்றில் வெள்ளம் --சிக்கியோர் 2 மணி நேரத்திற்கு பின் மீட்பு
ADDED : நவ 03, 2024 03:13 AM

ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அய்யனார் கோயில் ரோடு எஸ்.வளைவு பகுதியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியவர்களை நீண்ட நேர போராட்டத்திற்கு பின் 2 மணி நேரம் கழித்து தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
ராஜபாளையம் அய்யனார் கோயில் ஆற்றில் வெள்ளப்பெருக்கால் குளிக்க வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். இந்நிலையில் கூரை பிள்ளையார் கோயில் தெரு, திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பெண்கள் குழந்தைகள் 30க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் எஸ்.வளைவு பகுதி ஆற்றின் மறு கரைக்கு சென்று குளித்துக்கொண்டிருந்தனர்.
மாலை 5:00 மணிக்கு பெண்கள் குழந்தைகள் வீடுகளுக்கு திரும்பிய நிலையில் ராஜாம்பாறை, முள்ளிக்கடவு, வழுக்குப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் அங்கு குளித்து கொண்டிருந்த 9 பேர் கரைக்கு திரும்ப முடியாமல் சிக்கி கொண்டனர். இரவு 7:30 மணிக்கு அய்யனார் கோயில் ரோட்டை கடந்தவர்கள் ஆற்றின் மறுபுறம் அபாய குரல் எழுப்புவதை கண்டு வனத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு துறையினர், போலீசாருடன் சேர்ந்து மறு கரையில் உள்ளவர்களை கயிறு கட்டி மீட்கும் பணி தொடங்கியது. ஆற்றின் அகலம் 120 அடி இருந்ததுடன் இடுப்பளவு தண்ணீர் சென்றதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் இரண்டு மணி நேர காத்திருப்புக்கு பின் தீயணைப்புத்துறையினர் மலைவாழ் மக்கள் உதவியுடன் சிக்கியவர்களை கயிற்றினை வழங்கி ஒன்பது பேரை மீட்டனர்.