ADDED : அக் 07, 2024 04:44 AM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயில் புரட்டாசி 3ம் சனி உற்ஸவம் முடிந்த நிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை கணக்கிடும் பணி நடந்தது.
செயல் அலுவலர் சக்கரை அம்மாள் தலைமையில் கண்காணிப்பாளர் ஆவுடையம்மாள், ஆய்வாளர் முத்து மணிகண்டன் முன்னிலையில் காணிக்கைகள் எண்ணப்பட்டது. இதில் ரூ.12 லட்சத்து 88 ஆயிரத்து 789 காணிக்கை வரவாக இருந்தது. எண்ணும் பணியில் அறநிலையத்துறை ஊழியர்கள், பட்டர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.
