தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வங்கிகள் வேலை நிறுத்தம் வாடிக்கையாளர் சேவை பாதிப்பு

 வங்கிகள் வேலை நிறுத்தம் வாடிக்கையாளர் சேவை பாதிப்பு

 வங்கிகள் வேலை நிறுத்தம் வாடிக்கையாளர் சேவை பாதிப்பு


ADDED : பிப் 13, 2026 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2026 05:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் வங்கி தொழிற்சங்க கூட்டமைப்புகளின் வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம் நடந்தது.

அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், பேங்க் எம்பிளாயீஸ் பெடரேஷன் ஆப் இந்தியா, அகில இந்திய வங்கி அலுவலர்கள் சங்கம் சார்பில்மத்திய அரசு தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்ப பெறுவது, இன்சூரன்ஸ், வங்கித்துறையில் தனியார்மயத்தை கைவிடுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத்தில்அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் சார்பில் வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் நடந்தது.

3 சங்கங்களில் கிளார்க்குகள் அதிகம் உள்ளதால், அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் வங்கிகளில்பணம் பெறுவது, செலுத்துவது, பணத்தை மற்றொரு வங்கிகளுக்கு 'நெப்ட்'செய்வது, வங்கிக்கு உள்ளேயே பணபரிமாற்றம், செக் போடுவது பணிகள் பாதிக்கப்பட்டது. ஸ்டேட் வங்கி, ஐ.ஓ.பி., தவிர மற்ற தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பாதிப்பு இருந்தது. பழைய தனியார் வங்கிகளிலும் வாடிக்கையாளர் சேவை பாதிக்கப்பட்டது.

விருதுநகர் எல்.ஐ.சி., அலுவலகம் முன் நடந்த ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் காப்பீட்டு கழக ஊழியர் சங்க நிர்வாகி சங்கர் மனோபாலாஜி தலைமை வகித்தார். அகில இந்திய வங்கி ஊழியர் சங்க மாவட்ட துணை செயலாளர் அருணாச்சலம், பொருளாளர் ராஜா, பி.இ.எப்.ஐ., நிர்வாகி மாரிக்கனி ஆர்ப்பாட்டம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us