தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/போர்வெல் நீருடன் தாமிரபரணி தண்ணீரும் கலந்து சப்ளை குடிக்க முடியலை:வாரம் ஒரு முறையாவது தனியாக வழங்க மக்கள் எதிர்பார்ப்பு

போர்வெல் நீருடன் தாமிரபரணி தண்ணீரும் கலந்து சப்ளை குடிக்க முடியலை:வாரம் ஒரு முறையாவது தனியாக வழங்க மக்கள் எதிர்பார்ப்பு

போர்வெல் நீருடன் தாமிரபரணி தண்ணீரும் கலந்து சப்ளை குடிக்க முடியலை:வாரம் ஒரு முறையாவது தனியாக வழங்க மக்கள் எதிர்பார்ப்பு


UPDATED : செப் 19, 2026 04:57 PM

ADDED : செப் 19, 2026 04:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 19, 2026 04:57 PM ADDED : செப் 19, 2026 04:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ளூர் தண்ணீருடன், தாமிரபரணி தண்ணீரும் கலந்து சப்ளை செய்வதால் அதனை குடிப்பதற்கு பயன்படுத்த முடியாமல் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தவிர்க்க வாரம் ஒரு முறை முழு அளவில் தனியாக தாமிரபரணி தண்ணீரை சப்ளை செய்ய வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மாவட்டத்தில் தொலைநோக்கு பார்வையுடன் உள்ளூர் நீர் ஆதாரங்களை மாவட்ட நிர்வாகம் வலுப்படுத்த தவறியதாலும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை சரிவர நிறைவேற்றாததாலும், முறையாக பராமரிக்காதாலும் அனைத்து கிராமங்கள் முதல் நகரங்கள் வரை குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

2010க்கு முன்பே மாவட்டத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு மானூர் கூட்டுக் குடிநீர் திட்டம், தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வரபட்டதின் மூலம் மட்டும் தான் தற்போது ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

அதிலும் எந்த ஆண்டும் இல்லாத வகையில் தற்போது வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படும் நிலையில் மலையடிவார ஓடைகள், கண்மாய்கள், குளங்கள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பில் நகராட்சி குடிநீர் கிணறுகள் வறண்டு தினமும் ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் கூட பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ளூர் நீர் ஆதார தண்ணீரை மேல்நிலைத் தொட்டிகளில் ஏற்றி தினமும் மக்களுக்கு வழங்கி வருகின்றனர். இதில் தாமிரபரணி தண்ணீர் வரும்போது அதனையும் கலந்து சப்ளை செய்கின்றனர்.

இதனால் வாரம் ஒரு முறை கூட தங்களுக்கு தாமிரபரணி தண்ணீர் தனியாக கிடைக்காமல் கிராமப்புற மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதனால் வீடு தேடி வரும் தனியார் மினரல் வாட்டர்களையே ஒரு குடம் குடிநீர் ரூ.15 கொடுத்து வாங்கும் நிலைக்கு தினக்கூலி தொழிலாளர்கள் குடும்பங்கள் ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில் பல்வேறு இடங்களில் தாமிரபரணி குடிநீர் திட்ட குழாய்கள்

உடைந்து பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாக கழிவுநீர் வாறுகால்களில் கலப்பதை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காண முடிகிறது.

குழாய் உடைப்பு குறித்து மக்கள் தகவல் தெரிவித்தால் மட்டுமே உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள் அதனை சரி செய்ய வருகின்றனர். இதற்காக 3 நாட்கள் முதல் ஒரு வாரம் வரை ஆகிறது.

இதனால் மக்களுக்கு தேவை அதிகம் உள்ள நிலையில் தாமிரபரணி குடிநீர் வீணாக செல்வது பார்ப்பவர்களை பரிதவிக்க வைக்கிறது.

இந்நிலையில் உள்ளூர் தண்ணீருடன் தாமிரபரணி குடிநீர் கலந்து சப்ளை செய்வதால் மக்கள் சளி, இருமல், கல்லடைப்பு போன்ற நோய்களுக்கு ஆளாகும் நிலை கிராமப்புறங்களில் அதிகளவில் காணப்படுகிறது.

இதனை தவிர்க்க குறைந்த பட்சம் 5 முதல் 7 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமாவது போதுமான அளவிற்கு தாமிரபரணி குடிநீரை உள்ளாட்சி அமைப்புகள் முறையாக வழங்க மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலும், அறிவுரையும், தொடர் கண்காணிப்பும், குழாய் உடைப்புகளை காலதாமதமின்றி சரி செய்வதும் உடனடியாக அவசியமாகும். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விருதுநகர் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us