ADDED : ஆக 29, 2026 05:21 PM
அ நிறம் | அளவு
திருச்சுழி: திருச்சுழி நுாலகத்தில் இலக்கிய அமுது அமைப்பின் சார்பாக பட்டிமன்றம் நடந்தது.
இதற்கு புலவர் கணேசன் தலைமை வகித்தார். வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தர் அழகேசன் வரவேற்றார். தேசபக்தி மிக்கவர்கள் ஆண்களா, பெண்களா என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்திற்கு மின்வாரிய ஓய்வு பெற்ற முகவர் தங்கராஜ் நடுவராக பங்கேற்றார். தேவாங்கர் கலை கல்லூரி பேராசிரியர் செல்ல பாண்டியன், திருச்சுழி மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கதிரேசன், புலவர் ராஜபாண்டி, அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியைகள் சாந்தி, ராஜேஸ்வரி, செல்வலட்சுமி ஆகியோர் பேசினர்.
ஓய்வு எஸ்.ஐ., சுப்பிரமணி, கூட்டுறவுதுறை ஓய்வு அலுவலர் அழகுசுந்தரம், நூலக பணியாளர் மஞ்சுளா, பள்ளி கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். நுாலகர் பாஸ்கரன் நன்றி கூறினார்.
