/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி ரோட்டில் இடையூறாக பேரிகார்டுகள்
/
சிவகாசி ரோட்டில் இடையூறாக பேரிகார்டுகள்
ADDED : மார் 16, 2025 06:47 AM

விருதுநகர்; விருதுநகர் - சிவகாசி ரோட்டில் இடையூறாக உள்ள பேரிகார்டுகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த ரோடு எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள ரோடு. இந்த ரோட்டை பயன்படுத்த முடியாத சூழல் வரவே வராது. காரணம், சிவகாசிக்கு செல்வதற்கு இது ஒன்றே மெயின் வழி.
இந்நிலையில் நான்கு வழிச்சாலை குறுக்காக செல்லும் சிவகாசி ரோட்டின் துவக்கத்திலே பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளன. 2 வாரங்கள் முன்பு இப்பகுதியில் குடிநீர் லீக் ஆனது.
இதை சரி செய்ய தோண்டியதால் பேரிகார்டுகள் வைத்து தடுப்பு ஏற்படுத்தி உள்ளனர். பணியை முடிக்காமல் தாமதம் செய்து வருவதால் பேரிகார்டுகள் அப்படியே உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். குறிப்பாக இரவில் சுற்றி மது பார்கள் உள்ளதால் குடித்து விட்டு வரும் குடிமகன்கள் பேரிகார்டுகளில் மோதி விபத்தை சந்திக்கின்றனர்.
எனவே போலீசார் இந்த பேரிகார்டுகளை அகற்ற வேண்டும். விரைந்து பணிகளை முடிக்க குடிநீர் வடிகால் வாரியத்திற்கு அறிவுறுத்த வேண்டும்.