தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஆண்டாள் கோயிலில் அடிப்படை வசதிகள்

ஆண்டாள் கோயிலில் அடிப்படை வசதிகள்

ஆண்டாள் கோயிலில் அடிப்படை வசதிகள்


ADDED : ஆக 23, 2025 05:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 23, 2025 05:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பக்தர்களுக்கான பல்வேறு அடிப்படை வசதிகள் செய்வதற்கான பணிகளை காணொளி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

இத்திட்டத்தின்படி ரூ.7.85 கோடி மதிப்பில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டுதல், ரூ 2.70 கோடி மதிப்பில் ராஜகோபுரம் மற்றும் விமானங்களில் இரவு நேரங்களில் ஒளிரூட்டும் வகையில் மின் விளக்குகள் பொருத்தும் பணி, ரூ. 1.69 கோடி மதிப்பில் பக்தர்களின் பயன்பாட்டிற்காக வாகனங்கள் நிறுத்தும் இடம் மற்றும் சுகாதார வளாகம் கட்டும் பணி நடக்க உள்ளது.

இதனை நேற்று காலை 11:00 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

கோயிலில் நடந்த விழாவில் நகராட்சி தலைவர் ரவிகண்ணன், துணைத் தலைவர் செல்வமணி, அறநிலையத்துறை இணை ஆணையர் மாரியப்பன், செயல் அலுவலர் சக்கரையம்மாள், கண்காணிப்பாளர் ஆவுடையம்மாள், மற்றும் அறநிலையதுறை ஊழியர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us