/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நரிக்குடி ஒன்றியத்தில் பாழாகும் பேட்டரி குப்பை வாகனங்கள்
/
நரிக்குடி ஒன்றியத்தில் பாழாகும் பேட்டரி குப்பை வாகனங்கள்
நரிக்குடி ஒன்றியத்தில் பாழாகும் பேட்டரி குப்பை வாகனங்கள்
நரிக்குடி ஒன்றியத்தில் பாழாகும் பேட்டரி குப்பை வாகனங்கள்
ADDED : ஏப் 26, 2025 05:39 AM

நரிக்குடி : நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சிகளுக்கு வழங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ள குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்கள் பாழாகும் நிலை உள்ளது.
நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ், பல்வேறு ஊராட்சிகளுக்கு குப்பைகளை சேகரிக்க பேட்டரி வாகனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரூ. 82 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் 33 குப்பை வண்டிகள் கொள்முதல் செய்யப்பட்டன.
பல நாட்களாகியும் இன்னும் வழங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பாழாகும் அவல நிலை உள்ளது. ஊராட்சிகளில் சேகரமாகும் குப்பைகளை அள்ள முடியாமல் பணியாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
அது மட்டுமல்ல, மழை, வெயிலுக்கு திறந்த வெளியில் கிடப்பதால் துருப்பிடித்து வீணாகும் நிலை உள்ளது.
சார்ஜ் இறங்கி பேட்டரி வீணாகும் நிலை இருந்து வருகிறது. வாகனங்கள் பழுதாவதற்கு முன் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
அதிகாரிகள் கூறியதாவது: ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு அனுப்பி, எண்கள் வாங்க வேண்டியிருக்கிறது. வாகனத்தை எவ்வாறு இயக்க வேண்டும். பேட்டரிக்கு சார்ஜ் ஏற்றுவது எவ்வாறு என்கிற பயிற்சியை பணியாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
விரைந்து இப்பணிகள் முடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட ஊராட்சிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

