/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அங்கன்வாடி முன்பு சேறும், சகதியுமான ரோடு
/
அங்கன்வாடி முன்பு சேறும், சகதியுமான ரோடு
ADDED : நவ 29, 2024 05:18 AM

திருச்சுழி: திருச்சுழி அருகே வடக்குநத்தத்தில் அங்கன்வாடி மையம் முன்பு உள்ள ரோடு சேறும், சகதியுமாக இருப்பதால் குழந்தைகள் அவதிப்படுகின்றனர்.
திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது வடக்கு நத்தம் ஊராட்சி. இங்குள்ள பஸ் ஸ்டாப் அருகில் அங்கன்வாடி மையம் உள்ளது. இதில் 75 க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். அங்கன்வாடி மையத்திற்கு முன்பு உள்ள ரோடு சேதம் அடைந்துள்ளது. ரோட்டின் இருபுறமும் வாறுகால் கட்டப்படாததால், கழிவுநீர் ரோட்டில் ஓடுகிறது. மழைக்காலத்தில் மழைநீர், கழிவு நீர் சேறும் சகதியுமாக நடக்க முடியாத அளவிற்கும் உள்ளது. அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளை விட வரும் தாய்மார்கள் சிரமப்பட வேண்டியுள்ளது.
சங்கரபாண்டி, விவசாயி: ஊரில் அங்கன்வாடி மட்டும் அல்லாமல் பெரும்பாலான தெருக்களில் வாறுகால், ரோடு இல்லை. மழை காலத்தில் சிரமமாக உள்ளது. சேறும், சகதியுமாக உள்ள அங்கன்வாடி செல்லும் ரோட்டை குழந்தைகள் நலன் கருதி புதியதாக இருபுறமும் வாறுகால் கட்டி, ரோடு அமைக்க வேண்டும்.