ADDED : மார் 04, 2024 04:46 AM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சியில் ரூ.1.12 கோடிக்கான வளர்ச்சி திட்ட பணிகளை திறந்து வைத்தும், ரூ.7.57 கோடிக்கு நகராட்சி புதிய தினசரி சந்தை வளாகம் கட்டுவதற்கும் அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். தினசரி சந்தையில் 51 கடைகள், ஏ.டி.எம்., குடிநீர், ஓய்வு அறை, கழிப்பறைகள் உள்ளிட்ட பல வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது. நகராட்சி தலைவர் சுந்தரலட்சுமி, துணை தலைவர் பழனிச்சாமி, கமிஷனர் அசோக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
