ADDED : டிச 20, 2025 05:35 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் பா.ஜ., தலைமை அலுவலகத்தில் கன்னியாகுமரி பெருங்கோட்ட அமைப்பு சாரா தொழில் பிரிவு மாவட்ட மண்டல நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் விருதுநகர் கிழக்கு, மேற்கு மாவட்டம், துாத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்டத்தின் சார்பில் நடந்தது.
மாநில தலைவர் ராதாகிருஷ்ணன், செயலாளர் தினேஷ்குமார் ஆலோசனை வழங்கினார். விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி அமைப்பு சாரா தொழில் பிரிவு நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர். மாவட்ட அமைப்புசாரா தொழிற்பிரிவு மாவட்ட தலைவர் சங்கையா ஆலோசனை கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். மேற்கு மாவட்ட தலைவர் குருநாதன், துாத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் பழனி மாரியப்பன், விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன், பொதுச் செயலாளர் காளீஸ்வரி கலந்து கொண்டனர்.
