ADDED : மார் 14, 2024 02:55 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் பா.ஜ., தேர்தல் அலுவலக திறப்பு விழா நடந்தது.
அருப்புக்கோட்டை ஆத்திப்பட்டியில் விருதுநகர் லோக்சபா தேர்தலுக்கான அருப்புக்கோட்டை சட்டசபை தொகுதி தேர்தல் அலுவலக திறப்பு விழா நடந்தது. மாவட்ட தலைவர் பாண்டுரங்கன், தேர்தல் பொறுப்பாளர் வெற்றிவேல் திறந்தனர்.
மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் பேசுகையில், அருப்புக்கோட்டை சட்டசபைத் தொகுதியில் 240 பூத்களில் பூத் கமிட்டி முழுமை அடைந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கட்சி அமைப்பு ரீதியாக வலுப்பெற்று உள்ளது. விருதுநகர் லோக்சபா தொகுதியில் பா.ஜ., நின்றாலும், கூட்டணி கட்சி நின்றாலும் வெற்றி நிச்சயம் என பேசினார்.
மக்கள் தங்கள் கோரிக்கைகளை தெரிவிப்பதற்காக ஒரு பெட்டி சட்டசபை தொகுதி முழுவதும் கொண்டு செல்லப்படும். அந்த பெட்டியில் மக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக செலுத்தலாம் என்று கட்சி நிர்வாகிகள் கூறினர்.
