ADDED : பிப் 02, 2026 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் சட்டசபை தொகுதிக்கு பா.ஜ., கிழக்கு மாவட்ட கலந்தாய்வு கூட்டம் மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தலைமையில் நடந்தது. மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன், ஆடிட்டர் தர்மராஜன், வர்த்தக பிரிவு மாநில செயலாளர் காமாட்சி, உள்ளாட்சி மேம்பாடு பிரிவு மாநில செயலாளர் சிவமுருகேஷ்வர பாண்டியன் பங்கேற்றனர்.
*சாத்துார் படந்தாலில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சரவண துரை ராஜா தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் கோபால்சாமி, முன்னாள் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தனர்.சட்டசபை தொகுதி பொறுப்பாளர் மாரி கண்ணு வரவேற்றார்.பா.ஜ., மேலிடபொறுப்பாளர் சுதாகர் ரெட்டி பேசினார். மண்டல தலைவர்கள் பொன்ராஜ்,ஜெய்கணேஷ் பங்கேற்றனர்

