/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ராமர் பிரதிஷ்டை நிகழ்ச்சி மறுப்பை எதிர்த்து பா.ஜ., வழக்கு
/
ராமர் பிரதிஷ்டை நிகழ்ச்சி மறுப்பை எதிர்த்து பா.ஜ., வழக்கு
ராமர் பிரதிஷ்டை நிகழ்ச்சி மறுப்பை எதிர்த்து பா.ஜ., வழக்கு
ராமர் பிரதிஷ்டை நிகழ்ச்சி மறுப்பை எதிர்த்து பா.ஜ., வழக்கு
ADDED : ஜன 22, 2024 04:42 AM
விருதுநகர்; ''அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சியை முன்னிட்டு விருதுநகரில் ஏற்பாடு செய்த சிறப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்த தி.மு.க., அரசின் போலீஸ் துறையை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக, என விருதுநகரில் பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது: இன்று அயோத்தி ராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சி நடக்கிறது.
இதை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் பா.ஜ., சார்பில் 10 இடங்களில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக 5 நாட்கள் முன்பே அனுமதி கோரி கடிதம் அளித்திருந்தோம். ஆனால் நேற்று நள்ளிரவில் தான் அனுமதி மறுத்து போலீசாரால், நிர்வாகிகளுக்கு மறுப்பு கடிதம் வழங்கப்பட்டது. 5 நாட்களுக்கு முன்பே வழங்கியும் ஏன் கடைசி நேரத்தில் மறுக்கின்றனர். தி.மு.க., அரசின் இந்த போலீஸ் துறையின் செயல்பாடு கண்டனத்துக்குரியது. அமைச்சர் சேகர்பாபு மறுப்பு, தடை எதுவும் அறிவிக்கவில்லை என்று கூறுகிறார். அப்படி இருக்கையில் போலீசார் ஏன் அனுமதி மறுப்பு கடிதம் அளிக்கின்றனர். இவர்களுக்குள் ஏன் இத்தனை முரண்பாடு. இதை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளோம். இன்று விசாரணைக்கு வர உள்ளது, என்றார்.