நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : சிவகாசி சப் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சப் கலெக்டரை கண்டித்து பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிவகாசி சாட்சியாபுரம் ஆறுமுகம் காலனியில் பட்டா நிலத்தில் விநாயகர் கோயில் உள்ளது.
இதனை அகற்றுவதற்கு சப் கலெக்டர் பிரியா ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து மேற்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் சப் கலெக்டரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கு ஒன்றிய தலைவர் பிரதாப் தலைமை வகித்தார்.
ஹிந்து அமைப்புகள் நிர்வாகிகள் சதீஷ் லெனின், தங்கராஜ், பா.ஜ., மூத்த நிர்வாகிகள் வாசியப்பன், வெங்கடேஷ், மக்கள் கலந்து கொண்டனர்.
சப் கலெக்டர் அலுவலகத்தில் இல்லாத நிலையில் அலுவலக தரப்பில் கோயிலை இடிக்க உத்தரவிட்ட ஆணையை மறு பரிசீலனை செய்வதாக உறுதியளித்த பின்னர் கலைந்து சென்றனர்.

