ADDED : பிப் 19, 2026 06:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் பா.ஜ., சார்பில் பட்டியல் அணி சார்பில் தமிழகத்தில் பட்டியல் இன மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமை களைக் கண்டித்தும், அவர்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியை மடை மாற்றி வேறு திட்டத்திற்கு ஒதுக்கி அதில் குளிர் காயும் தி.மு.க., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
பட்டியல் அணி மாவட்டத் தலைவர்கள் பாலமுருகன், கருப்பையா ஆகியோர் தலைமை வகித்தனர். கிழக்கு மாவட்டத் தலைவர் பாண்டுங்கன், மேற்கு மாவட்டத் தலைவர் சரவண துரை ராஜா முன்னிலை வகித்தனர்.
மாநில செயற்குழு உறுப்பினர் வெற்றி வேல், முன்னாள் மாநில துணைத் தலைவர் பொன்ராஜ், பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினர் குரு சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

