ADDED : பிப் 22, 2026 07:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் அருகே ஆர்.ஆர். நகரில் பா.ஜ., சார்பில் இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் திறனற்ற தி.மு.க., அரசை கண்டித்து கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிறப்பு அழைப்பாளராக கூட்டுறவு பிரிவு மாநில அமைப்பாளர் மகா சுசிந்திரன் பங்கேற்றார். மேலும் இளைஞரணி மாநில செயலாளர் சரவண பாண்டியன், இளைஞரணி கிழக்கு, மேற்கு மாவட்ட தலைவர்கள் குமரேசன், கருப்பசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

