/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பா.ஜ., 370 தொகுதிகளில் வெற்றி பெறும் பார்லி., தேர்தல் அலுவலக விழாவில் பேச்சு
/
பா.ஜ., 370 தொகுதிகளில் வெற்றி பெறும் பார்லி., தேர்தல் அலுவலக விழாவில் பேச்சு
பா.ஜ., 370 தொகுதிகளில் வெற்றி பெறும் பார்லி., தேர்தல் அலுவலக விழாவில் பேச்சு
பா.ஜ., 370 தொகுதிகளில் வெற்றி பெறும் பார்லி., தேர்தல் அலுவலக விழாவில் பேச்சு
ADDED : பிப் 11, 2024 01:29 AM

விருதுநகர்: பா.ஜ., வேட்பாளர்கள் 370 தொகுதிகளிலும் வெற்றி பெறுவர், என விருதுநகரில் பா.ஜ., மாநிலச்செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் பேசினார்.
விருதுநகர் தாமரை நகரில் பா.ஜ.,வின் பார்லி., தேர்தல் அலுவலக திறப்பு விழா நடந்தது. கிழக்கு மாவட்டத்தலைவர் பாண்டுரங்கன் தலைமை வகித்தார்.
மேற்கு மாவட்டத்தலைவர் சரவணத்துரை, மதுரை மேற்கு மாவட்டத்தலைவர் சசிக்குமார் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பா.ஜ., மாநில பொதுச்செயலாளர்கள் ராம ஸ்ரீனிவாசன், பொன் பால கணபதி, மதுரை கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் வெற்றிவேல், கஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகரன், தொழில் பிரிவு மாவட்ட தலைவர் மணிகண்டன் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
ராமஸ்ரீனிவாசன் பேசியதாவது: லோக்சபா தேர்தலில் 2014 ஆண்டில் 283 தொகுதிகள், 2019 தேர்தலில் 303 தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெற்றது.
தற்போது நடக்க உள்ள தேர்தலில் 370 சட்டப்பிரிவை ரத்து செய்ததன் காரணமாக பா.ஜ., வேட்பாளர்கள் 370 தொகுதிகளிலும் வெற்றி பெறுவர்.
பா.ஜ., ஆட்சி அமைந்ததும் சிவகாசி பட்டாசு உற்பத்தியை பாதிக்கும் சீன பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கு ஆதரவான சட்டம் லோக்சபாவில் பா.ஜ., கொண்டுவந்த போது தமிழகத்தை சேர்ந்த ஒரு எம்.பி., கூட வாக்களிக்காமல் புறக்கணித்தனர். பா.ஜ., எம்.பி.,க்கள் மட்டுமே ஆதரவு அளித்து சட்டம் நிறைவேறியது, என்றார்.