sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விருதுநகர் அரசு மருத்துவமனையில் சலவை செய்யாமல் தேங்கும் போர்வை, விரிப்பு

/

விருதுநகர் அரசு மருத்துவமனையில் சலவை செய்யாமல் தேங்கும் போர்வை, விரிப்பு

விருதுநகர் அரசு மருத்துவமனையில் சலவை செய்யாமல் தேங்கும் போர்வை, விரிப்பு

விருதுநகர் அரசு மருத்துவமனையில் சலவை செய்யாமல் தேங்கும் போர்வை, விரிப்பு


ADDED : ஆக 13, 2025 02:03 AM

Google News

ADDED : ஆக 13, 2025 02:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் படுக்கைகளின் விரிப்புகள், போர்வை, தலையணை உறைகள் ஆகியவற்றை சலவை செய்வதற்கான ஊழியர்கள் பற்றாக்குறையாக உள்ளது. இதனால் ஒரு உள்நோயாளி பயன்படுத்திய படுக்கை விரிப்புகளை சலவை செய்யாமல் மற்ற உள்நோயாளிகளும் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை 2022 ஜன. 12ல் திறக்கப்பட்டது. இங்கு 640 படுக்கைகளில் இருந்து நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப தற்போது 1250 படுக்கைகளாக உயர்த்தப்பட்டு செயல்படுகிறது.

உள்நோயாளிகளின் படுக்கைகளில் விரிப்புகள், போர்வைகள், தலையணை உறைகள், அறுவை சிகிச்சை அரங்குக்கான சீருடைகள், மகப்பேறு பிரிவு பணியாளர்களுக்கான சீருடைகள், டாக்டர்களுக்கான சீருடைகள் உள்பட அனைத்து மருத்துவனை துணிகளையும் தினமும் தரைதளத்தில் சலவை செய்து அந்தந்த வார்டுகளுக்கும், டாக்டர்களுக்கும் அனுப்பி வைக்கப் படுகிறது.

இதற்காக 4 சலவை மிஷின்கள், 3 ஈரத்தை பிழியும் மிஷின்கள், 2 உலர் வைப்பு மிஷின்கள், 1 இஸ்திரி மிஷின் ஆகியவை பயன்பாட்டில் உள்ளது. இப்பணிகளை செய்ய நிரந்தர ஊழியர்கள் 22 பேர் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் மருத்துவனை திறந்த நாள் முதல் தற்போது நிரந்தர பணியாளர்கள் நியமிக் கப்படாமல் தனியார் ஒப்பந்த ஊழியர்கள் சலவை பணிகளை செய்து வந்தனர்.

விருதுநகர் அரசு மருத்துவமனை சலவை பணிகளில் 8 ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தம் மாறியதால், அதில் 4 ஊழியர்கள் வேலை இழந்தனர். தற்போது 4 ஊழியர்கள் மட்டுமே இப்பணிகளை செய்து வருகின்றனர்.

இதனால் நோயாளிகளின் விரிப்புகள், போர்வைகள், தலையணை குறிப்பிட்ட நேரத்தில் சலவை செய்து முடிக்க முடியாமல் மூடை மூடைகளாக தேக்கி வைக்கப்படும் நிலை உண்டாகியுள்ளது.

இந்த பணிகள் பாதிப்பால் வார்டுகளில் ஒரு உள்நோயாளி பயன்படுத்திய விரிப்புகள், போர்வைகள், தலையணை உறைகள் ஆகியவற்றை சலவை செய்யாமல் அப்படியே மற்ற உள்நோயாளிகளுக்கு பயன்படுத்தும் நிலை ஏற்படுகிறது. இது போன்ற சுகாதார மற்ற நடைமுறையால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே விருதுநகர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கான விரிப்புகள், போர்வைகள், தலையணை உறைகள், பணியாளர் சீருடைகள் ஆகியவற்றை சலவை செய்யும் இடத்திற்கு தேவைக்கு ஏற்ப கூடுதல் பணியாளர்களை நியமித்து நோயாளிகளின் நலன் காக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us