ADDED : மார் 16, 2026 07:01 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரி இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம், என்.எஸ்.எஸ்., என்.சி.சி., செஞ்சுருள் சங்கம், விருதுநகர் விடியல் அரிமா சங்கம், ரோட்டராக்ட் சங்கம், அரசு மருத்துவக்கல்லுாரி சார்பில் கல்லுாரி தலைவர் சம்பத்குமார் தலைமையில் ரத்ததானம் முகாம் நடந்தது.
செஞ்சுருள் சங்க இணை அதிகாரி ஹரிபாண்டிராஜன் வரவேற்றார். இதில் கல்லுாரி உப தலைவர்கள் ராமசாமி, டெய்சிராணி, செயலாளர் மகேஷ்பாபு, பொருளாளர் குமரன், கல்லுாரி முதல்வர் சாரதி, சுயநிதி பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ், அரிமா சங்க தலைவர் சீனிவாசன், உறுப்பினர் பழனிசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
