ADDED : மே 14, 2026 04:10 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூ., நிர்வாகி சிந்தன் நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய தொழிற்சங்க மையம், டி.ஒய்.எப்.ஐ., ரத்த தான கிளப் சார்பில் சி.ஐ.டி.யு., மாவட்ட பொருளாளர் கார்மேகம், மாரிமுத்து தலைமையில் ரத்த தான முகாம் நடந்தது.
முகாமை விருது நகர் அரசு மருத்துவமனை ரத்த வங்கி பொறுப்பு மருத்துவ அலுவலர் ஆனந்தி தலைமையிலான மருத்துவக்குழுவினர் ஏற்பாடு செய்தனர். இதில் மாவட்ட செயலாளர் தேவா, துணைத் தலைவர் பாண்டியன், துணை செயலாளர் ராமர் உள்பட பலர் பங்கேற்றனர்.
