ADDED : ஆக 15, 2026 11:43 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலை, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவமனைகள், ரத்த வங்கி சார்பில் ரத்த தான முகாம் இணைவேந்தர் டாக்டர் அறிவழகி தலைமையில் நடந்தது.
துணைத்தலைவர் சசிஆனந்த் முகாமை துவக்கி வைத்தார். 130க்கு மேற்பட்ட மாணவர்கள் ரத்த தானம் செய்தனர். துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன், மாணவர் நல இயக்குனர் பாலகண்ணன், நிர்வாக அதிகாரி சரவணா ஆகியோர் ரத்ததானம் செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் ராஜ் பிரதீஷ், கலசுராமன் தலைமையில் மருத்துவமனை ஊழியர்கள் செய்திருந்தனர்.
