ADDED : மார் 04, 2024 04:50 AM
அ நிறம் | அளவு
சிவகாசி: முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகாசியில் வடக்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்தார். மாநகர செயலாளர் உதயசூரியன் தலைமை வகித்தார். ரத்ததானம் செய்த நபர்களுக்கு பழங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் வனராஜா, மேயர் சங்கீதா, துணை மேயர் விக்னேஷ்பிரியா, சிவகாசி ஒன்றிய குழு துணை தலைவர் விவேகன்ராஜ், பகுதி செயலாளர் காளிராஜ், முன்னாள் நகர் துணைத் தலைவர் பொன் சக்திவேல், மாவட்ட வர்த்தக அணி துணைத்தலைவர் இன்பம், கட்சியினர் கலந்து கொண்டனர்.
