ADDED : பிப் 14, 2026 06:16 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி, கையெழுத்து இயக்கம் பென்டகன் கார்மென்ட்ஸ் நிறுவன ஊழியர்களிடம்நடந்தது.
வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவர், சார்பு நீதிபதி பாலமுருகன் தலைமை வகித்தார். இணை இயக்குநர் ஆனந்தி, நிர்வாக இயக்குனர் ஜவஹர், தொழிலாளர் ஆய்வாளர் உமாமகேஸ்வரன்,ஊழியர்கள் 1000 பேர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். சார்பு நீதிபதி பேசும்போது கொத்தடிமை தொழிலாளர்கள், பணம் பெற்றுக் கொண்டு அங்கேயே தங்கி வேலை செய்பவர்கள். இது போன்று ஆலைகளில் இருப்பது தெரிந்தால் உடனே போலீஸ்துறையிலோ, தொழிலாளர் நலத்துறையிலோ புகார் தெரிவிக்க வேண்டும் என்றார்.
