நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்; வத்திராயிருப்பில் கிளை நுாலகத்திற்கு வாசகர் பேரவை சார்பில்புத்தகங்கள் வழங்கும் விழாவும் அவற்றை வழங்கிய ஓய்வு பெற்ற ஆசிரியர் முருகனுக்கு பாராட்டு விழாவும் நடந்தது.
இந்து மேல்நிலைப்பள்ளி முன்னாள் செயலாளர் சங்கர கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் தவமணி முன்னிலை வகித்தார். டாக்டர் பால்ச்சாமி வரவேற்றார்.  நூலகத்திற்கான புதிய நூல்களை ஆசிரியர் முருகன் வழங்க அவற்றை வாசகர் பேரவை நிர்வாகிகள், கிளை நூலக அலுவலர் பெற்றுக் கொண்டனர்.
ஆசிரியரை பாராட்டி முன்னாள் எம்.எல்.ஏ  ராமசாமி,  வாசகர் பேரவை செயலாளர் நந்தகுமார் உட்பட பலர் பாராட்டினர்.  தமிழ்நாடு அறிவியல்இயக்க ஒருங்கிணைப்பாளர் முத்துப்பாண்டி நன்றி கூறினார்.

