UPDATED : அக் 07, 2026 05:24 PM
ADDED : அக் 07, 2026 05:14 PM
அ நிறம் | அளவு
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு ரங்காராவ் லயன்ஸ் பெண்கள் மெட்ரிக் பள்ளியில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சார்பில் புத்தக கண்காட்சி நடந்தது
பள்ளி தலைவர் சுந்தரராஜ பெருமாள், பொருளாளர் டாக்டர் பால்சாமி, அரிமா சங்க தலைவர் முத்துவேல் தலைமை வகித்து, கண்காட்சியை துவக்கி வைத்தனர். முதல்வர் ராஜேஸ்வரி வரவேற்றார்.
பள்ளித் தாளாளர் விஜயகுமார் மாணவர் பருவத்தில் புத்தக வாசிக்கும் பழக்கத்தின் அவசியம் குறித்து பேசினார்.
விழாவில் அரிமா சங்க செயலாளர் முத்துக்குமார், பொருளாளர் கருணாகரன், பள்ளி துணைத் தலைவர் ஆரியன் மதுரம், இணை செயலாளர் கூடலிங்கம், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
