ADDED : ஜூன் 30, 2025 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் :வெம்பக் கோட்டை மண் குண்டாம் பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சிறுகதை நுால் வெளியீட்டு விழா நடந்தது.
இப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் ஹாருண்யா, ரித்திகா ,மாணவர் கபிலேஷ் பாண்டியன் ஆகியோர் எழுதிய கதைகள் என்னும் நுால் வெளியீட்டு விழா நடந்தது.
வட்டார கல்வி அலுவலர் பாலமுருகன் நுாலை வெளியிட தலைமை ஆசிரியர் சுப்புலட்சுமி பெற்றுக் கொண்டார்.சிறுகதை நுால் எழுதிய மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.வட்டார வளமைய மேற்பார்வையாளர் சங்கீதா பயிற்றுநர் உமாராணி உதவி ஆசிரியர் மல்லிகா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.