ADDED : நவ 18, 2025 03:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் கரிசல் இலக்கிய கழகம் சார்பில் நூல் வெளியீட்டு விழா நடந்தது.
இலக்கிய கழகச் செயலாளர் அறம் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தேவதாஸ், கவிஞர் ஆனந்தி முன்னிலை வகித்தனர். எழுத்தாளர் காமராஜ் வரவேற்றார். கல்லுாரி மாணவி பூங்குழலி எழுதிய 'மனதின் மழலை' நுால் மற்றும் பனித்துளி இதழினை சென்னை மாநகராட்சி இணை ஆணையர் ஜெயசீலன் வெளியிட்டார். எ.கா.த பெண்கள் கல்லுாரி முதல்வர் லட்சுமி பெற்றுக்கொண்டார். கலை இலக்கிய பெருமன்ற கிளை செயலாளர் கண்மணி ராசா தொகுத்து வழங்கினார். கரிசல் இலக்கிய கழகச் செயலாளர் முத்து பாரதி நன்றி கூறினார்.

