/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆட்டோ டயர் வெடித்து சிறுவன் பலி: 2 பேர் காயம்
/
ஆட்டோ டயர் வெடித்து சிறுவன் பலி: 2 பேர் காயம்
ADDED : செப் 06, 2025 02:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்:விருதுநகர் மாவட்டம் மத்தியசேனை அருகே ஆட்டோ டயர் வெடித்து ஒயிலாட்ட குழுவை சேர்ந்த சரவணன் 17, பலியானார். இருவர் காயமடைந்தனர்.
ராஜபாளையம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ஈகிள் சாம்பியன் பாய்ஸ் என்ற ஒயிலாட்டம் குழுவினர் ஆமத்துாரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு ஆட்டோவில் ஊர் திரும்பினர். மத்திய சேனை ஊர் அருகே சென்ற போது பின் பக்க டயர் வெடித்தததால் ஆட்டோ கவிழ்ந்தது.
இதில் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சரவணன் சம்பவ இடத்திலே பலியானார். முரளிதரன் 22, ஆட்டோ டிரைவர் யுவராஜ் காயமடைந்தனர். ஆட்டோவில் 9 பேர் வந்த நிலையில் மற்றவர்களுக்கு காயம் இல்லை. ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.