/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பைக்கில் பறக்கும் சிறுவர்கள் --போலீசார் நடவடிக்கை எதிர்பார்ப்பு
/
பைக்கில் பறக்கும் சிறுவர்கள் --போலீசார் நடவடிக்கை எதிர்பார்ப்பு
பைக்கில் பறக்கும் சிறுவர்கள் --போலீசார் நடவடிக்கை எதிர்பார்ப்பு
பைக்கில் பறக்கும் சிறுவர்கள் --போலீசார் நடவடிக்கை எதிர்பார்ப்பு
ADDED : அக் 12, 2025 04:57 AM
ராஜபாளையம் : ராஜபாளையம் நகர் பகுதியில் 18 வயது நிறைவடையாத சிறுவர்கள் பைக்கை அதிவேகமாக இயக்குவதால் விபத்து அதிகரித்து வருகிறது. ஹெல்மெட் கண்காணிக்கும் போலீசார் இவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் வாகன உரிமையாளர்கள் அல்லது சிறுவனின் பெற்றோருக்கோ அபராதம் அல்லது சிறை தண்டனை நடைமுறையில் உள்ளது.
இருப்பினும் ராஜபாளையம் முடங்கியார் ரோடு, மதுரை ரோடு, டி.பி மில்ஸ் ரோடு, மலையடிப்பட்டி மெயின் ரோடுகளில் 18 வயது நிறைவடையாத சிறுவர்கள் பைக்கில் வேகமெடுத்து சுற்றி வருவது தொடர்கதையாகி உள்ளது.
போக்குவரத்து அதிகம் உள்ள இப்பகுதிகளில் கெத்து காட்டுகிறேன் என்ற பெயரில் வாகனங்களில் அசுர வேகத்தில் பறப்பதால் பிற வாகன ஓட்டிகள், ஏதும் அறியாத பொதுமக்கள் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். கடந்த 3 மாதங்களில் 10க்கும் அதிகமான விபத்துகள் ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
விதிமீறலில் ஈடுபடுபவர்களின் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பதன் மூலம் இவற்றை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்த முடியும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.