/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
துாய்மை பணியாளர்களுக்கும் பிப். 9 முதல் காலை உணவு
/
துாய்மை பணியாளர்களுக்கும் பிப். 9 முதல் காலை உணவு
துாய்மை பணியாளர்களுக்கும் பிப். 9 முதல் காலை உணவு
துாய்மை பணியாளர்களுக்கும் பிப். 9 முதல் காலை உணவு
ADDED : ஜன 23, 2026 03:38 AM
சிவகாசி: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சிகளில் பணிபுரியும் அனைத்து துாய்மை பணியாளர்களுக்கும் பிப். 9 முதல் காலை உணவு வழங்கப்படும், என தமிழ்நாடு துாய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர் ஆறுச்சாமி தெரிவித்தார்.
சிவகாசியில் துாய்மை பணியாளர்களுக்கு நல வாரிய அடையாள அட்டை, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் பங்கேற்ற தமிழ்நாடு துாய்மை பணியாளர்கள் நல வாரியம் தலைவர் ஆறுச்சாமி பேசியதாவது: தற்போது பணிபுரியும் துாய்மை பணியாளருக்கு மாதம் ரூ.5000 ஊதியம் வழங்கப்படுகிறது. இதனை ரூ. பத்தாயிரம் ஆக உயர்த்தி வழங்க முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்படும். தனியார் மூலம் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படும் துாய்மை பணிகளை ரத்து செய்து அரசு சார்பில் பணிகள் மேற்கொள்ள வலியுறுத்தப்படும்.
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு தற்போது சோதனை முயற்சியில் காலை உணவு வழங்கப்படுகிறது. பிப். 9 முதல் அனைத்து துாய்மை பணியாளர்களுக்கும் உணவு வழங்கப்படும். பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தியே பணிபுரிய வேண்டும். தங்களது குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

