/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காரியாபட்டி பஜாரில் பால பணிகள் முடிந்து போக்குவரத்துக்கு திறப்பு
/
காரியாபட்டி பஜாரில் பால பணிகள் முடிந்து போக்குவரத்துக்கு திறப்பு
காரியாபட்டி பஜாரில் பால பணிகள் முடிந்து போக்குவரத்துக்கு திறப்பு
காரியாபட்டி பஜாரில் பால பணிகள் முடிந்து போக்குவரத்துக்கு திறப்பு
ADDED : ஜன 02, 2026 05:46 AM
காரியாபட்டி: காரியாபட்டி பஜாரில் பால பணிகள் முடிந்து போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்டதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
காரியாபட்டி பஜாரில் குறுகிய பாலம், வளைவில் இருந்ததால் அடிக்கடி விபத்து ஏற்பட்டது. இரு வாகனங்கள் விலகிச் செல்ல முடியாது. அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் பஜாரில் இருந்து முக்கு ரோடு வரை இருபுறமும் பேவர் பிளாக் கற்கள் பதிக்க, பால கட்ட ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் ஒரு பகுதியாக பஜாரில் இருந்த பழைய பாலம் அகற்றப்பட்டு, புதிய பாலம் கட்டும் பணி நடந்தது.
இதற்காக 2 மாதங்களாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு, முக்கு ரோடு, பைபாஸ் வழியாக மதுரை, அருப்புக் கோட்டைக்கு செல்ல வேண்டி இருந்தது. டவுன் பஸ்கள் மட்டும் பஸ் ஸ்டாண்ட் சென்று வந்தன. பயணிகள் முக்கு ரோடு, பஸ் ஸ்டாண்ட் என அங்கும் இங்கும் அலைந்து திரிந்தனர்.
முக்கு ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் குறுக்கும் நெடுக்குமாக சென்றதால் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது. இரு வாக னங்கள் விலகிச் செல்ல கடும் சிரமம் இருந்தது. பாலப் பணிகளை விரைவாக முடித்து பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.
பால பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு, 70 சதவீத பணிகள் முடிந்தன. பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, புதிய பாலம் வழியாக போக்குவரத்திற்கு, திறந்து விடப்பட்டது. தற்போது அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்ட் வழியாக பழைய வழித்தடத்தில் இயக்கி வருவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

