/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சைக்கிள் ஓட்ட கற்றுக்கொடுக்கும் போது அடித்த அண்ணன் கொலை: தம்பிக்கு 5 ஆண்டு சிறை

ADDED : ஆக 26, 2025 12:29 AM
ஸ்ரீவில்லிபுத்துார்:
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை கல்லமநாயக்கன்பட்டியில் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்தபோது தன்னை அடித்த அண்ணன் வரதராஜனின் 26,கழுத்தில் துண்டை போட்டு நெரித்து கொலை செய்த தம்பி வைரவனுக்கு,19, 5 ஆண்டு சிறைதண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வெம்பகோட்டை கல்லமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வரதராஜன், கட்டுமான தொழிலாளி. இவரது சித்தப்பா மகன் வைரவன் 19. மாட்டு பண்ணை தொழிலாளி. 2024 டிச., 9 இரவு வைரவனுக்கு சைக்கிள் ஓட்ட வரதராஜன் கற்றுக் கொடுத்தார். அப்போது  ஒழுங்காக சைக்கிள் ஓட்டாததால் வைரவனின் கன்னத்தில் வரதராஜன் அடித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த வைரவன், வரதராஜனின் கழுத்தில் துண்டை போட்டு நெரித்து கொலை செய்தார். ஆலங்குளம் போலீசார் வைரவனை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் வைரவனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி ஜெயக்குமார் தீர்ப்பளித்தார்.