/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சதுரகிரியில் பி.எஸ்.என்.எல்., அலைபேசி டவர்
/
சதுரகிரியில் பி.எஸ்.என்.எல்., அலைபேசி டவர்
ADDED : ஜூலை 19, 2025 12:31 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்களின் தகவல் தொடர்பு வசதிக்காக பி.எஸ்.என்.எல். சார்பில் அலைபேசி டவர் தற்காலிகமாக அமைக்கப்படுகிறது.
இக்கோயிலில் ஆடி அமாவாசை வழிபாடு ஜூலை 22 முதல் துவங்கி ஜூலை 24 வரை நடக்கிறது.
இந்த நாட்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பக்தர்களின் தகவல் தொடர்பு வசதிக்காக மலை உச்சியில் தற்காலிகமாக பி.எஸ்.என்.எல். டவர் அமைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான பணியில் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
திருவிழாவை முன்னிட்டு தற்காலிகமாக அமைக்கப்படும் இந்த அலைபேசி டவரினை நிரந்தரமாக செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சதுரகிரி பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.