/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
புதர்மண்டிய பஸ் நிறுத்தங்கள் கொசுத்தொல்லை, நோய்த்தொற்று அபாயம்
/
புதர்மண்டிய பஸ் நிறுத்தங்கள் கொசுத்தொல்லை, நோய்த்தொற்று அபாயம்
புதர்மண்டிய பஸ் நிறுத்தங்கள் கொசுத்தொல்லை, நோய்த்தொற்று அபாயம்
புதர்மண்டிய பஸ் நிறுத்தங்கள் கொசுத்தொல்லை, நோய்த்தொற்று அபாயம்
ADDED : ஜன 02, 2024 04:49 AM

விருதுநகர்: விருதுநகரில் பல பஸ் நிறுத்தங்களின் பின்புற பகுதிகள் குப்பை அதிகரித்து புதர்மண்டி கிடக்கின்றன. இதனால் கொசுத்தொல்லை, நோய் தொற்று அபாயம் அதிகரித்துள்ளது.
பஸ் நிறுத்தங்கள் சிமென்ட் கூரை அமைத்து நிழற்குடைகளும், இரும்பு இருக்கைகள், துாண்கள் அமைத்து நிழற்குடைகளும் அமைக்கப்படுகின்றன. பெரும்பாலும் இவற்றை யொட்டி கடைகள் இருப்பதால் அதன் குப்பை பஸ் நிறுத்த பின் பகுதியில் தான் கொட்டப்படுகிறது.
மூன்று பக்கம் மூடிய நிலையில் இருக்கும் நிழற்குடை பஸ் நிறுத்தத்தில் பிரச்னை இல்லை. ஆனால் திறந்த நிலையில் இரும்பு இருக்கைகள் கொண்ட நிழற்குடைகளில் நிற்கும் போது கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. பயணிகள் நிற்க முடியாமல் தவிக்கின்றனர்.
மேலும் பல நிறுத்தங்களின் பின்புறம் மரம், செடி கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கின்றன. விஷப்பூச்சிகள் நடமாட்டத்தால் பயணிகள் அச்சப்படும் சூழலும் உள்ளது. அனைத்து பஸ் நிறுத்தங்களின் பின்புற பகுதிகளில் புதர்மண்டி கிடக்கும் குப்பையை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். மக்கள் அச்சமின்றி பஸ்சுக்காக காத்திருப்பதை நகராட்சி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

