/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
புல்ஸ்டாக் டெவலப்மெண்ட் பயிற்சி முகாம்
/
புல்ஸ்டாக் டெவலப்மெண்ட் பயிற்சி முகாம்
ADDED : டிச 14, 2025 05:26 AM
சிவகாசி: சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரியில் கணினி அறிவியல் துறை, கணினி இயந்திரங்கள் அமைப்பு சார்பில் புல்ஸ்டாக் டெவலப்மெண்ட் மற்றும் பிளாக் செயின் தொழில்நுட்பம் என்ற தலைப்பில் கல்லுாரி பேராசிரியர்களுக்கான
ஒரு வார பயிற்சி முகாம் நடந்தது. பி.எஸ்.ஆர்., கல்வி குழுமம் தாளாளர் சோலைசாமி தலைமை வகித்தார். கல்லுாரி இயக்குனர் விக்னேஸ்வரி முன்னிலை வகித்தார். முதல்வர் செந்தில்குமார், டீன் மாரிசாமி துவக்கி வைத்தனர். இன்க்ரிக்ஸ் டெக்லுாசன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி அபிஷேக், தலைமை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன் பேசினர். ஏற்பாடுகளை துறை தலைவர் பாலசுப்பிரமணியன், பேராசிரியர்கள் ராமதிலகம், பழனிகுமார், அருண் செய்தனர்.-----

