/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டம்புதுார் பள்ளிக்கு பஸ் இயக்கம்
/
பட்டம்புதுார் பள்ளிக்கு பஸ் இயக்கம்
ADDED : டிச 12, 2025 06:04 AM

விருதுநகர்: விருதுநகர் பட்டம்புதுார் உயர்நிலைப்பள்ளிக்கு தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலி யாக வழித்தடம் நீட்டித்து பஸ் இயக்கப்பட்டு உள்ளதால் மாணவர்கள் பயனடைந்தனர்.
விருதுநகர் பட்டம் புதுார் உயர்நிலைப் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு வழித்தடம் இல்லாததால் நான்கு வழிச்சாலையில் பட்டம்புதுார் அருகே இறங்கி குறுக்கே கடந்து வந்தனர்.
இது குறித்து தலைமை ஆசிரியர் திருச்செல்வராஜா முயற்சியில் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோடு போடப்பட்டது. அதற்கு பின் பஸ் வழித்தடத்தில் நிற்க கோரிக்கை வைத்த நிலையில், அது இழு பறியாக இருந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக கோட்டநத்தம் பஸ் வழித்தட நீட்டிப்பு செய்யப்பட்டு பட்டம்புதுார் உயர்நிலைப்பள்ளியின் சர்வீஸ் ரோட்டின் அருகே வந்து மாணவர்களை ஏற்றி, இறக்கிசெல்ல நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதை நேற்று கலெக்டர் சுகபுத்ரா துவங்கி வைத்து மாணவர்கள் உடன் பயணித்தார். இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் பயனடைந்தனர்.

