/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மம்சாபுரத்திற்கு பஸ் பற்றாக்குறை ஆட்டோவில் ஆபத்து பயணம்
/
மம்சாபுரத்திற்கு பஸ் பற்றாக்குறை ஆட்டோவில் ஆபத்து பயணம்
மம்சாபுரத்திற்கு பஸ் பற்றாக்குறை ஆட்டோவில் ஆபத்து பயணம்
மம்சாபுரத்திற்கு பஸ் பற்றாக்குறை ஆட்டோவில் ஆபத்து பயணம்
ADDED : டிச 08, 2024 04:58 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மம்சாபுரத்திற்கு இயங்கிய மினிபஸ் விபத்திற்கு பிறகு மீண்டும் இயங்காததால் ஆட்டோக்களில் 15 பேர் வரை ஆபத்தாக பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை தவிர்க்க ஒரு அரசு டவுன் பஸ் மம்சாபுரம் சென்று திரும்பும் வகையில் இயக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மம்சாபுரத்திலிருந்து ஏராளமானோர் தினமும் தங்கள் கல்வி, தொழில், வேலைவாய்ப்புக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து செல்கின்றனர்.
இதற்காக அரசு டவுன் பஸ்களும்,4 தனியார் பஸ்களும், ஒரு மினி பஸ்சும் இயங்கி வந்தது.
ஆனால், கொரோனா ஊரடங்கு காலத்திற்குப் பிறகு தனியார் பஸ்கள் இயங்கவில்லை. மினி பஸ் மக்களிடம் வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் செப். 27 காலை மினி பஸ் கவிழ்ந்து 4 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது வரை மினி பஸ் மீண்டும் இயங்கவில்லை.
அரசு, தனியார் பஸ்கள் இயங்கினாலும், காலை, மாலை வேலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்காததால் மக்கள் ஆட்டோக்களில் 15 பேர் வரை பயணிக்கும் நிலை உள்ளது.
பொன்னாங்கண்ணி கண்மாய் கரையில் எதிரும் புதிருமாக இரண்டு வாகனங்கள் வந்து செல்வது ஆபத்தான நிலையில் உள்ளது.
இந்நிலையில் அதிவேகத்தில் வரும் ஆட்டோக்களால் விபத்து அபாயம் காணப்படுகிறது.
எனவே, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மம்சாபுரம் சென்று திரும்பும் வகையில் மேலும் ஒரு அரசு பஸ் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.