/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வத்திராயிருப்பிலிருந்து சென்னை கோவைக்கு இன்று பஸ்கள் இயக்கம்
/
வத்திராயிருப்பிலிருந்து சென்னை கோவைக்கு இன்று பஸ்கள் இயக்கம்
வத்திராயிருப்பிலிருந்து சென்னை கோவைக்கு இன்று பஸ்கள் இயக்கம்
வத்திராயிருப்பிலிருந்து சென்னை கோவைக்கு இன்று பஸ்கள் இயக்கம்
ADDED : ஜன 19, 2025 04:40 AM
வத்திராயிருப்பு: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விருதுநகர் மண்டலத்தின் வத்திராயிருப்பு கிளையில் இருந்து இன்று (ஜன.19) சென்னை, கோவைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து வத்திராயிருப்பு மக்கள் சிரமமின்றி செல்லும் வகையில் இன்று (ஜன. 19) இரவு 6:00 மணிக்கு சென்னை கிளாம்பாக்கத்திற்கு ஒரு சிறப்பு பஸ் ரூ.500 கட்டணத்திலும், இரவு 9:00 மணிக்கு பல்லடம் வழியாக கோவைக்கு ரூ .250 கட்டணத்திலும், இரவு 9:30 மணிக்கு பொள்ளாச்சி, உக்கடம் வழியாக கோவைக்கு ரூ 270 கட்டணத்திலும் பஸ்கள் இயக்கப்படுகிறது.
வத்திராயிருப்பிலிருந்து சென்னை மற்றும் கோவைக்கு நேரடி பஸ்கள் இயக்குவது அப்பகுதி மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.