/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மேம்பாலத்தில் செல்லும் பஸ்கள்: ஸ்ரீவி., லட்சுமியாபுரம் மக்கள் தவிப்பு
/
மேம்பாலத்தில் செல்லும் பஸ்கள்: ஸ்ரீவி., லட்சுமியாபுரம் மக்கள் தவிப்பு
மேம்பாலத்தில் செல்லும் பஸ்கள்: ஸ்ரீவி., லட்சுமியாபுரம் மக்கள் தவிப்பு
மேம்பாலத்தில் செல்லும் பஸ்கள்: ஸ்ரீவி., லட்சுமியாபுரம் மக்கள் தவிப்பு
ADDED : நவ 12, 2025 11:57 PM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் அருகே லட்சுமியாபுரம் நான்கு வழிச்சாலை மேம்பாலத்தில் பஸ்கள் செல்வதால் லட்சுமியாபுரம் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, சர்வீஸ் ரோட்டில் ராஜபாளையம் பஸ்கள் வந்து செல்ல அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து திருமங்கலம் செல்லும் நான்கு வழிச்சாலையில் கிருஷ்ணன் கோவிலை அடுத்து 3 கி.மீ. தூரத்தில் லட்சுமியாபுரம் உள்ளது.
இங்கு விருதுநகர், அருப்புக்கோட்டையில் இருந்து வரும் அரசு பஸ்கள் மட்டுமே நின்று செல்லும் ஒரு சில சமயங்களில் மதுரையிலிருந்து ராஜபாளையம் செல்லும் பஸ்கள் பயணிகள் வேண்டுகோளுக்கிணங்க நிறுத்தப்படும்.
இந்நிலையில் இங்கு மேம்பாலம் அமைக்கப்பட்டதால் அனைத்து பஸ்களும் சர்வீஸ் ரோட்டில் வராமல் மேம்பாலம் வழியாக செல்கிறது. இதனால் லட்சுமியாபுரம் மக்கள் மணிக்கணக்கில் காத்து கிடக்கின்றனர் .அல்லது கிருஷ்ணன் கோவிலுக்கு ஆட்டோ பிடித்து வர வேண்டி உள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே மதுரை, விருதுநகர், அருப்புக்கோட்டை நகரங்களில் இருந்து இருந்து ராஜபாளையம் செல்லும் பஸ்கள் லட்சுமியாபுரம் சர்வீஸ் ரோட்டில் வந்து செல்ல அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க் கின்றனர்.

