UPDATED : ஆக 22, 2026 06:29 PM
ADDED : ஆக 22, 2026 06:23 PM
அ நிறம் | அளவு
சிவகாசி:சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரியில் வணிகவியல் துறை சார்பில் இளைஞர்களை வலுப்படுத்துதல் தேசத்தை கட்டியெழுப்புதல் என்ற தலைப்பில் கல்லுாரிகளுக்கு இடையேயான வணிகம் சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டன.
கல்லுாரி முதல்வர் அசோக் தலைமை வகித்தார். வணிகவியல் துறை தலைவர் சீனிவாசன் வரவேற்றார். தமிழகத்திலிருந்து 23 கல்லுாரிகளைச் சேர்ந்த 300 மாணவர்கள் பங்கேற்றனர். சிவகாசி அரசு கல்லுாரி முதல் இடத்தையும், எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி இரண்டாம் இடத்தையும் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. உதவி பேராசிரியர் மணிகண்டன் நன்றி கூறினார்.
