/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வேளாண் பயிர் காப்பீட்டுக்கு அழைப்பு
/
வேளாண் பயிர் காப்பீட்டுக்கு அழைப்பு
ADDED : நவ 27, 2025 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: விருது நகர் மாவட்டத்தில் ராபி பருவத்தில் மக்காச்சோளம், கம்பு, துவரை, பருத்தி பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கு நவ. 30 கடைசி நாள். மேலும் சம்பா நெல், சோளம் பயிருக்கு டிச.16, நிலக்கடலை, சூரியகாந்திக்கு டிச. 30, எள் பயிருக்கு 2026 ஜன. 21 இறுதி நாளாகும்.
இயற்கை பேரிடர்கள், பூச்சி நோய் தாக்குதல் உள்பட பல்வேறு காரணங்களால் ஏற்படும் இழப்புகளை கருத்தில் கொண்டு தங்களின் பயிர்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

