ADDED : செப் 20, 2026 06:51 PM
அ நிறம் | அளவு
சிவகாசி: இந்தியன் பயர் ஒர்க்ஸ் அசோசியேசன் சார்பில் பட்டாசு தொழிலில் உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து கலந்துரையாட மத்திய அரசின் தொழில் துறை இணைச் செயலாளர் காஜலிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து அவர் செப். 24 ல் புது டெல்லியில் உள்ள வாணிஞ்ய பவனில் சந்திக்க ஒப்புதல் கொடுத்துள்ளார்.
இந்தியன் பயர் ஒர்க்ஸ் அசோசியேசன் தலைவர் தமிழ்ச்செல்வன் கூறுகையில், பட்டாசு தொழில் பிரச்னைகள் குறித்து கலந்துரையாட அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில் மத்திய அரசின் தொழில் துறை இணைச் செயலாளர் ஒப்புதல் கொடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் பட்டாசு உற்பத்தியாளர்கள் பங்கேற்று தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம், என்றார்.
