ADDED : பிப் 03, 2024 05:07 AM
விருதுநகர் : கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 9, 10ம் வகுப்புகளில் படிக்கும் பிற்படுத்தப்ட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
பெற்றோரின் உச்சகட்ட ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். தகுதியுள்ள மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.4000 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும்.
இத்திட்டத்தின்கீழ் பயன்பெற தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அல்லது அஞ்சல் வங்கிகளில் தமது பெயரில் வங்கிக்கணக்கு துவங்கி அதனை தமது ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்.
ஆதார் எண், வங்கி விபரங்களை வருமானச் சான்று, சாதிச்சான்று நகல்களுடன் சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மாணவிகளின் விபரங்களை எமீஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெற வேண்டும், என்றார்.
