/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பாதுகாப்பு அலுவலர் பணியிடத்திற்கு அழைப்பு
/
பாதுகாப்பு அலுவலர் பணியிடத்திற்கு அழைப்பு
ADDED : அக் 29, 2024 04:32 AM
விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு:மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பாதுகாப்பு அலுவலர் காலிப்பணியிடத்திற்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பதவிக்கான கல்வித்தகுதி -முதுநிலை சமூகப்பணி (சமூகவியல்/உளவியல்), கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும். பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். குறைந்த பட்சம் 22 வயதாக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது எஸ்.சி., எஸ்.டி., 35, எம்.பி.சி., 32, பொது 30 ஆகும். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.இப்பணிக்கு மாதம் தொகுப்பூதியம் ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். இப்பணிக்கு தகுதியானவர்கள் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், கலெக்டர்அலுவலக வளாகம், விருதுநகர் மாவட்டம் என்ற முகவரிக்கு நவ. 10க்குள் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.