/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு அழைப்பு
/
திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு அழைப்பு
ADDED : ஜன 12, 2026 05:28 AM
விருதுநகர்: தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்டம் காளிதாஸ் செய்திக்குறிப்பு: சாப்ட்வேர் டெவலப்பர், செயற்கை நுண்ணறிவு, பைத்தான், ஜாவா, ஐ.ஓ.டி., சிமுலேஷன் ரோபோட்டிக்ஸ், பிளாக் செயின் உள்ளிட்ட 40 பயிற்சி பிரிவுகளில் இணைய வழி மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
உயர்கல்வி உதவித் தொகை பெறும் குழந்தைகளின் தந்தை அல்லது தாய்க்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு, குழந்தைகளின் விவரங்கள் பெறப்பட உள்ளது மேலும் இப்பியற்சியில் கலந்து கொள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களின் இளங்கலை அல்லது முதுகலை முதுகலை பிரிவில் உயர்கல்வி, பாலிடெக்னிக், டிப்ளமோ, ஐ.டி.ஐ., படிக்கும், படித்த மாணவர்கள் பங்கேற்கலாம். கல்லுாரி சான்று, ஆதார் நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் விண்ணப்பிக்கலாம், என்றார்.

