/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு அழைப்பு
/
திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு அழைப்பு
ADDED : பிப் 16, 2026 05:22 AM
விருதுநகர்: தொழிலாளர் உதவி ஆணையர் காளிதாஸ் செய்திக்குறிப்பு:
கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகள், உயர்கல்வி பொறியியல், கலை, அறிவியல், இளங்கலை, முதுகலை உதவித் தொகை பெறும் குழந்தைகளுக்கு இணைய வழி திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
சாப்ட்வேர் டெவலப்பர், செயற்கை நுண் ணறிவு, பைத்தான், ஜாவா, நெட், ஐ.ஓ.டி., சிமுலேஷன், ரோபோட்டிக்ஸ், பிளாக் செயின் உள்ளிட்ட 40 பயிற்சி பிரிவுகளில் ஆன்லைன் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இதில் பங்கேற்க https://registration.tnbocw.com/ என்ற இணையதளத்தில் கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற அலைபேசி எண், பதிவு எண்ணை உள்ளீடு செய்து விண்ணப்பிக்கலாம், என்றார்.

