/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு அழைப்பு
/
தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு அழைப்பு
ADDED : ஆக 25, 2025 05:30 AM
விருதுநகர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு:
சமூக நல அலுவலகத்தின் கீழ் செயல்படும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தின் தகவல் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு 11 மாதத்திற்கான ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
கல்வித்தகுதி கணினி, தகவல் தொழில் நுட்பபிரிவில் இளங்கலைபட்டம் பெற்றிருக்கவேண்டும். முன் அனுபவம், அரசு சாரா தகவல் தொழில்நுட்பம் சார்ந்த மாநில அல்லது மாவட்ட அளவில் தரவு மேலாண்மை,செயல்முறை ஆவணங்கள் அடிப்படையிலான அறிக்கையிடல் வடிவங்களில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்கவேண்டும். 35 வயதிற்குள் இருக்கவேண்டும்.
தொகுப்பூதியமாக மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். தொடர்புக்கு மாவட்ட சமூகநல அலுவலகத்தை அணுகலாம், என்றார்.

