தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விண்ணப்பிக்க அழைப்பு

விண்ணப்பிக்க அழைப்பு

விண்ணப்பிக்க அழைப்பு


ADDED : அக் 13, 2024 04:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 13, 2024 04:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: இளம் சாதனையாளர்களுக்காக பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இதர பிற்படுத்தபட்டோர், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த நாடு முழுவதும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது.

பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு ரூ.2.50 லட்சம், இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள்: அக். 15. கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை சரிபார்க்க கடைசி நாள் அக். 31. இத்திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவர்கள் OTR எண் பதிவு செய்து 2024--25 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பித்தை புதுப்பித்து கொள்ளலாம், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us